கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், ரெஸ்டோ பார்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்..? மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரியில் கஞ்சா,மது உள்ளிட்ட போதை பழக்கங்களால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் புற்றீசல் போல் திறக்கப்படும் ரெஸ்டோ பார்களால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, கஞ்சா மற்றும் மது போதையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும், கஞ்சா விற்பனையை தடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், ரெஸ்டோ பார்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், எந்த வித நடவடிக்கை எடுக்காத புதுவை அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments