புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி.
புயல் சென்னை பரங்கிப்பேட்டை இடையே தான் கரையை கடக்கும் என கூறியுள்ளனர்.புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என இருந்தால் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மழை நீர் தேங்காத வகையில் 60 மின் மோட்டர் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் அறிவுறுத்தப்பட்டள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்குவதற்காக 121 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவைப்பட்டால் உணவுகள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி பேரிடர் மேலாண்மை நிதி தேவையான அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மழை நேரத்தில் அரசு அனைத்து துறைகளும் சரியான பணியை மேற்கொண்டு வருகின்றனர் காலாப்பட்டு கடற் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments