சாலைகளில் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடும் மழை நீர். ஆறு மணி நேரத்தில் 5 சென்டிமீட்டர் மழை..
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவில் அதி கன மழை பெய்து வருகிறது. காலை 8.30மணி வரை 5 சென்டி மீட்டர் மழை பதிவாகிய நிலையில் தொடர்ந்து அதி கன மழை பெய்து வருகிறது. தற்போது மதியம் 2:30 மணி வரை ஆறு மணி நேரத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் தரங்கம்பாடியில் ரேணுகா தேவி அம்மன் ஆலயத்தின் நான்கு வீதிகளில் மழைநீர் வீதிகளில் காட்டாறு வெள்ளம் போல் ஓடுகிறது. டேனிஸ் கோட்டைக்கு செல்லும் கடற்கரை வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதேபோல் தரங்கம்பாடி அரசு மருத்துவமனை முகப்பு வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள தண்ணீரை வடியவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments