விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுக்கும் முடிவை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது..! ஆளூர் ஷாநாவாஸ்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்று பேசுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் பேசிக் கொண்டு உள்ளார்கள். விசிக எடுக்கும் நிலைப்பாடு,எழுச்சித்தமிழர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக அதிமுக கூறுகிறது. தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி செய்த ஒரு கட்சி, நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு கட்சி,மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை பெற்ற ஒரு கட்சி இரட்டை இலைக்கு என்று ஒரு செல்வாக்கு இன்றும் உள்ளது.அப்படிப்பட்ட கட்சியின் மிகப் பெரிய நிர்வாகி திருமாவளவனை மேடையில் வைத்துக் கொண்டே அண்ணன் திருமாவளவன் எடுக்க போகும் முடிவை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். 25 வருடங்களுக்கு முன்பு இப்படி கூறினார்களா.
புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ விடுதலை சிறுத்தைகளை எதிர்பார்க்கின்றனர்.விஜய் மாநாடு நடத்தினார் லட்சோப லட்சம் இளைஞர்களை திரட்டி காட்டினார். மிகப்பெரிய மாநாட்டை நடத்திய விஜய் கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வாங்க என கூப்பிடுகிறார்கள் அப்ப ஆண்ட கட்சி, ஆளும் கட்சி,புதிய கட்சி என அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திருமாவளவன் மீது தான் பார்வை என்றார்.
No comments