புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பு தினத்தை அனுசரித்து விழிப்புணர்வு பேரணி..
புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் காலாபட்டு அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பாக புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பு தினத்தை அனுசரித்து பெரிய காலபட்டு செவாலியர் செல்லான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு நடைபாதை பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் குமார் தலைமை தாங்கி மாணவர்களிடையே புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மற்றும் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் மாணவர்கள் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் வேலாயுதம், ஆசிரியர்கள் மனோகர்,பெண் சுகாதார மேற்பார்வையாளர் ஷகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments