Breaking News

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் கூடுதலாக விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் கூடுதலாக விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24வது மாவட்ட மாநாட்டின் தீர்மானத்தின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ரயில்வேயின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களிடம் CPM கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம். ஜெயசங்கர் மனு வழங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.கண்ணன் உடன் இருந்தார்.

கோரிக்கை வைகை, பல்லவன், குருவாயூர் விரைவு ரயில்களும், மும்பைக்கு செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில்களும், மேலும் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை தினந்தோறும் இயங்கும் பயணியர் ரயிலை விருத்தாச்சலம் வரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மதுரை எம் பி சு.வெங்கடேசன் மகிழ்ச்சியுடன் மனுவைப் பெற்றுக்கொண்டு மேல் நடவடிக்கைகள் எடுத்திட உரிய அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன் என கூறினார்.

No comments

Copying is disabled on this page!