குழந்தைகள் தினத்தை ஒட்டி பத்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கிய செம்பனார்கோவில் கலைமகள் கல்வி குழுமம், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவில் பகுதியில் தலைமை இடமாக கொண்டு மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நடத்தி வரும் கலைமகள் கல்வி குழுமத்தின் சார்பில் குழந்தைகள் தினத்தை ஒட்டி சுமார் 10,000 மரக்கன்றுகளை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் வழங்கினர் கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் நெடுஞ்செழியன் நிர்வாக இயக்குனர் என் எஸ் குடியரசு ஆகியோர் ஏற்பாட்டில் செம்பனார்கோவில், ஆயப்பாடி, சங்கரன் பந்தல், திருக்கடையூர், ஆக்கூர், மேலையூர், மயிலாடுதுறை, திருவிளையாட்டம் உட்பட 13 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கல்லூரியில் அந்தந்த பள்ளிகளில் மற்றும் கல்லூரியில் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் கொண்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர்கள் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேடமணிந்து வந்திருந்தனர் மேலும் குழந்தைகள் ஜவர்கலால் நேரு ராணுவ வீரர் மருத்துவர் என பல்வேறு வேடம் அணிந்து ஆர்வத்துடன் மரக்கன்றுகள் பெற்று சென்றனர் அனைவருக்கும் பள்ளி கல்லூரி நாட்களை பயனுள்ளதாக்கவும் தாங்கள் படிக்கும் காலத்தை நினைவு கூறும் விதமாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் தாங்கள் பெற்று செல்லும் மரக்கன்றுகளை தங்கள் வீடுகளில் நடவு செய்து பராமரிக்கும் புகைப்படம் வீடியோவை பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.
No comments