Breaking News

உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 24 வது மாநாடு உளுந்தூர்பேட்டையில் சீத்தாராம் யெச்சூரிநினைவரங்கம் ஜெயராம் தெய்வானை திருமண மண்டபத்தில் நவம்பர் 9 சனிக்கிழமை எழுச்சி உடன் துவங்கியது,

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் எழுச்சிமிகு மாநாட்டை துவங்கி வைத்து உரையாற்றினார்,

இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற மாநாட்டின் தலைமை சாமிநாதன், ஸ்டாலின்மணி, தனலட்சுமி,கட்சியின் செங்கோடியினை உளுந்தூர்பேட்டை நகர மூத்த நிர்வாகி ஆறுமுகம் ஏற்றி வைத்தார்,

முன்னதாக திருநாவலூர் ஒன்றியம் சார்பில் நாராயணசாமி நினைவு தீபச்சுடரினை அலமேலு, சீனிவாசன், அய்யனார், ஆனந்தராஜ், எடுத்து நினைவுச் சுடரினை செந்தில் பெற்றுக்கொண்டார்,மாநாட்டின் கட்சியின் கொடியினை சங்கராபுரம் ஒன்றியம் சார்பில் பழனி, சிவாஜிஎடுத்து வர அதனை ஆனந்தன் பெற்றுக் கொண்டார்,மாநாட்டின் அஞ்சலி தீர்மானத்தை சுப்பிரமணியன் வாசித்தார்,மாநாட்டு வரவேற்புரையாக மோகன்,வேலை அறிக்கை இணை ஜெய்சங்கர் வாசித்தார்,வரவு செலவு அறிக்கை என பூவராகவன் சமர்ப்பித்தார்,மாநாட்டினை வாழ்த்தி மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணி ஒன்றிய மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் கட்சியினுடைய வளர்ச்சி குறித்து பேசினார்,புதிய மாவட்ட குழு தேர்வு

மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது இதில் மாவட்ட செயலாளராக ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார் 12 பேர் கொண்ட மாவட்ட செயற்குழுவின் தேர்வு செய்யப்பட்டது

மாநாட்டு தீர்மானங்களாக

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் புதிதாக ரிங் ரோடு அமைத்துக் கொடுக்க கோரியும்

உளுந்தூர்பேட்டையில் புதிதாக கலைக் கல்லூரி அமைத்து தரக்கோரியம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்தேறி வரும் பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்களை தடுக்க கோரியும்

கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கவும் வனத்துறை காவல்துறை வருவாய்த்துறை அத்துமீறலை தடுத்து நிறுத்தவும்

100 நாள் வேலைத்திட்டத்தில் முழு கூலியை வழங்க கோரியும்

40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் மாநாட்டின் நிறைவுறையாற்றினார்

வரவேற்பு குழு தலைவர் சேகர் நன்றி உரையாற்றினார்.

No comments

Copying is disabled on this page!