புதுச்சேரி தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள் மற்றும் யு.பி.ஐ., ஆப் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது..
இந்தியாவில் டீ க்கடை தொடங்கி பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரை யு.பி.ஐ., ஆப் மூலம் தங்கள் பண பரிவர்த்தனைகளை சுலபமாக செய்து வருகின்றன.இதனால் வணிக நிறுவனங்களில் சில்லறை தட்டுப்பாடு வெகுவாக குறைந்தது.
மேலும் ,விரைவாகவும், பாதுகாப்பாகவும் இதன் செயல்பாடுகள் இருப்பதால் சிறிய கிராமங்களில் கூட இதன் சேவை அதிகரித்து வருகிறது.
இவ்வளவு அவசியம் வாய்ந்த சேவையாக மாறி உள்ள யு.பி.ஐ., ஆப்பின் சேவை புதுச்சேரியில் உள்ள தபால் நிலையங்களில் இல்லாமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.புதுச்சேரி தபால் அலுவலக பிரிவின் கீழ் தலைமை தபால் நிலையம் உட்பட 48 கிளை தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஸ்டாம்ப் தொடங்கி, தங்கம் வரை புதுச்சேரியின் அஞ்சலகங்களில் விற்பனை நடப்பதால் ஒட்டு மொத்தமாக ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.
இது மட்டுமின்றி போஸ்ட் பேமெண்ட் வங்கியும், ஏ.டி.எம்., சென்டரும் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் இயங்குகிறது.இவ்வளவு வசதிகள் இருந்தும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறைகள் எதுவும் இல்லாததால், ரூபாய் நோட்டுகள் மூலமாக தபால் நிலையத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
No comments