சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மஞ்சள் நீராட்டு விழா..!! தொகுதி எம்எல்ஏ பிரகாஷ் குமாருக்கு குவியும் பாராட்டுக்கள்..
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர் ஏழை தொழிலாளி சபீர். இவர் அதே பகுதியில் சாலையோரம் பழக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த, அந்த பகுதியில் உள்ள பல்வேறு திருமண நிலையங்களை அணுகியபோது அதிக விலை இருந்ததால், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமாரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விழா நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விழா நடத்த பிரகாஷ் குமார் எம்எல்ஏ அனுமதி தந்ததுடன், அலுவலக ஊழியர்களை விழா முடியும் வரை உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார். இதனால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாழை மரம்,தோரணம் கட்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் செயல் தொகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
No comments