சீர்காழி தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் முருகானந்தம், துணைத் தலைவர்கள் பாபு, பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் இளவரசு கலந்து கொண்டு பேசுகையில், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இளநிலை முழுநிலை ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமத்திற்கான உச்சவரப்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்ய வேண்டும் மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் மற்றும் முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களில் பெறப்படும் மனுக்களை முடிவு செய்திட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய்த்துறை ஊழியர்களுக்கு பணி நெருக்கடிகளை வழங்கக் கூடாது. பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் நேற்று தாலுகா அலுவலகத்தில் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு பணி நிமிர்த்தமாக வந்த பொதுமக்கள் பணியாளர்கள் பணியில் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments