மணலூர்பேட்டையில் வாக்காளர் சேர்த்தல் திருத்தல் சிறப்பு முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணலூர்பேட்டை பேரூராட்சியில் பாகம் எண்:-205,206,207,208,209,210 ஆகிய பாகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தல் ஆகிய பணிகளின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆகிய வசந்தம் க.கார்த்திகேயன் அவர்களின் ஆலோசனைப்படி முகாமினைரி ஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி மற்றும் மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது திமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள்,BLA2, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட மற்றும் பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments