Breaking News

தென்னலக்குடி பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியில் சுரங்க வழி பாதை அமைத்திட கிராம மக்கள் எதிர்ப்பு..? எம்.பி. சுதா நேரில் ஆய்வு..

 


மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி கிராமத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை வைத்தீஸ்வரன் கோவில், தென்னலக்குடி, எடக்குடி வடபாதி, காளிகாவல்புரம், தெக்கிருப்பு, சாந்தபுத்தூர், நெய்குப்பை, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் சீர்காழியில் இருந்து இந்த சாலை வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சாலை அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர் உட்பட வைணவ தலங்கள், நவகிரக கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது. 

இந்த சாலை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன் உள்ளதாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு தென்னலக்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் தென்னலக்குடி- வைத்தீஸ்வரன் கோவில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு  தற்போது சிறிய அளவில் குறுகலாக சப்வே (சுரங்கப்பாதை) அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குறுகலான சப்வே (சுரங்கப்பாதை) அமைக்க கூடாது பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை எதுக்கு கடந்த சில மக்கள் வந்து கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர் இது கோரிக்கை குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினரிடமும் மாவட்ட ஆட்சியர் இடமும் அப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர் இந்நிலையில் மயிலாடுதுறை எம்பி சுதாவிடமும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர் பகுதியில் எம்பி சுதா நேரடி சென்று பார்வைக்கு ஆய்வு செய்தார் அப்போது அப்பகுதியில் மேம்பட்ட பாலமாக அமைத்திட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியதை நகாய் அதிகாரிகளிடம் எம்பி சுதா கலந்து ஆலோசித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை அமைத்திட வலியுறுத்தினார்.ஆய்வின்போது 

நகாய் திட்ட இயக்குனர் சக்திவேல், திட்ட ஆலோசகர் ஜெகதீசன், பொறியாளர் ஜெகதீஷ், ஒப்பந்த களப்பொறியாளர் அணில்,காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன், வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் அன்பு, மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!