ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற பழங்குடியினா் கௌரவ தின விழாவில் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொலி புதுச்சேரியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆண்டுதோறும், பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பழங்குடியினா் விடுதலை போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி, பழங்குடியினா் கௌரவ தின விழா மத்திய அரசால் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மத்திய அரசு சாா்பில் பிகாா் மாநிலத்தில் உள்ள ஜமூய் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டாா்.பிரதமரின் நிகழ்ச்சி அனைத்து மாநிலங்களிலும் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. புதுச்சேரியில் தா்மாபுரி பகுதியில் தனியாா் மண்டபத்தில் பிரதமா் நிகழ்ச்சியின் காணொலிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.
புதுச்சேரி ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில முதல்வா் ரங்கசாமி, பேரவைத் தலைவா் செல்வம், அமைச்சா் சாய் சரவணன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.டி.ஆறுமுகம், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் முத்தம்மா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனா்.
No comments