Breaking News

மாநில ஓட்டபோட்டியில் விக்டோரியல்பள்ளி சாதனை.!!

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற குடியரசு தின தடகளப் போட்டிகள் இவ்வாண்டு ஈரோடு நகரில் அமைந்துள்ள வி. ஓ. சி பார்க் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் விக்டோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் யு. முகமது உசைர் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவு மாணவர்கள் கலந்து கொண்ட 80 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் வென்று வெண்கல பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இக்கல்வியாண்டில் மாநில தடகளப் போட்டியில் சீர்காழி தாலுகாவில் இருந்து பதக்கம் வென்ற ஒரே மாணவர் என்ற சிறப்பினை பெற்றுள்ளார். இச்சாதனையை புரிந்து ஊர் திரும்பிய மாணவரை சீர்காழி ரயில் நிலையம் முதல் சீர்காழியின் முக்கிய வீதிகள் வழியாக திருமுல்லைவாசல் கிராமம் வரை இரண்டு குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட சாரட் குதிரை வண்டி மூலம் பள்ளியின் தாளாளர்கள் கே. ராஜி. கே. ராஜேஷ், கே. ராஜீவ் காந்தி, ஆகியோர் சால்வை அணிவித்து அம் மாணவரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர். ராஜதுரை, ஜி.புருஷோத்தமன், ஆகியோரை அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் பூம்புகார் பிரமுகர் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. என். ரவி, மற்றும் கே. ராஜு புனிதா, கே.ராஜேஷ் தமிழ்வாணி, கே.ராஜீவ் காந்தி ஜெயலா, வெற்றி பெற்ற மாணவரின் பெற்றோர் எம்.உமர், பரக்கத் நிஷா, சீர்காழி உடற்கல்வி இயக்குனர் எஸ். முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ். செல்லதுரை, டி. முரளி,,சூரியமூர்த்தி, ஜான் ஹென்றிஸ், பிரவீன் ஆனந்த்,பள்ளியின் முதல்வர் உட்பட 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஏராளமான பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வெற்றியாளர்களை பட்டாசுவெடித்து, சாரட் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். நிறைவாக விக்டோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி கே.ராஜேஷ் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!