இந்தியாவிலே அதிக ராணுவ வீரர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளனர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி பெருமிதம்.
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என சான்று பெற வேண்டியதர்க்காக அலுவலகம் செல்ல வேண்டும் ஆனால் தற்போது ஜீவன் பிரமான் திட்டத்தின் செயலி மூலம் தங்களது கைபேசியில் அல்லது கணினி இணையதளம் மூலம் உயிருடன் இருப்பதை பதிவு செய்து அதற்கான சான்று பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த செயலி முன்னால் படை வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களைக் கொண்ட மாவட்டமாகும் இங்கு தான் அதிக அளவில் ஓய்வு ஊதியம் பெரும் முன்னாள் படை வீரர்களும் இருக்கின்றனர்.
எனவே இந்த திட்டமானது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் அவர்கள் எளிதில் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை பெற முடியும் இதன்மூலம் எந்த சிக்கலும்மின்றி தொடர்ந்து ஓய்வதும் பெற முடியும் என்று கூறினார் இவ்விழாவில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
-வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments