வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீரம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது..
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ செங்கழுநீரஅம்மன் ஆலயம் உள்ளது.
இந்த தேவஸ்தானத்துக்கு முதலியாா்பேட்டை வேல்ராம்பட்டில் 11.5 ஏக்கா் நிலம் உள்ளது.இந்த நிலம் குத்தகை அடிப்படையில் தனியாரால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கை நடைபெற்றது.
அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா், வருவாய் துறை வட்டாட்சியா் பிரித்விராஜ், கோயில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டிணம் மக்கள் குழு அமைப்பினா் முன்னிலையில் கோயில் நிலம் மீட்டு சீலிடப்பட்டது.மீட்கப்பட்ட கோயில் நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமாா் ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
No comments