பொதுப்பணித்துறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கடிதம்..
புதுச்சேரி பொதுப்பணி துறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார். ஆனால் தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதா என பாஜக தலைமை தெளிவுபடுத்த வேண்டும். புதுச்சேரியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பாஜக. பண பலத்தை நம்பி வரும் பாஜக வினரை புதுச்சேரி மக்கள் தோற்கடிப்பார்கள். அடுத்து எங்கள் ஆட்சி அமையும் போது இந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வது நிச்சயம்” என்றார்.
No comments