துணை முதல்வராக ஆன பின்பு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வருகை.
மயிலாடுதுறை சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்ற சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நாகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் மயிலாடுதுறைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் சி.வ. கணேசன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருமண மண்டபத்திற்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு மேடையில் ஏறி மணமக்கள் அபிநயா அபிஷேக் தம்பதிகளுக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு உடனே திரும்பி கடலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
No comments