உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி நலத்திட்ட உதவி.
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்நநாளையொட்டி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், தூத்துக்குடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி தலைமை வகித்து அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிரநிதிகள் நாகராஜ், செல்வின், மாவட்ட விவசாய அணி துணைஅமைப்பாளர் அரிகிருஷ்ண கோபால், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு, ஒன்றிய வழக்கறிஞர் அணி மகேந்திரன், இளைஞரணி சண்முக நாராயணன், தகவல்தொழில்நுட்ப அணி மணிகண்டன், மாணவர் அணி சற்குணம், தொழிலாளர் அணி மொபட் ராஜன், கிளைச் செயலாளர்கள் அருள் ஜெயபாலன், மாடசாமி, தர்மராஜ், கணேசன், ராஜா, சின்னத்துரை, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments