உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!
துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி அண்ணா பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
விழாவில், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். சக்திவேல், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, முனியசாமி, சுப்பையா, டென்சிங், ஜான்சன், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், கருப்பசாமி, பொன்பெருமாள், பொன்ராஜ், கதிரேசன், ரவீந்திரன், முக்கையா, கங்காராஜேஷ், செந்தில்குமார், கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், இசக்கிராஜா, கண்ணன், பவாணி, ஜான்சிராணி, ரெக்ஸின், தெய்வேந்திரன், கந்தசாமி. பொன்னப்பன், மரியகீதா, மகேஸ்வரி, பாப்பாத்தி மற்றும் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில் வட்டச்செயலாளர் கதிரேசன் தலைமையில் பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி இனிப்பு வழங்கினார்.
வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் எஸ்டிஆர் பொன்சீலன் புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் விடுதியில் வைத்து பராமரிக்கப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாநகர அமைப்பாளர் சாகுல்ஹமீது, துணைத்தலைவர் செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில்வர்புரம் லூசியா பார்வையற்றோர் பள்ளி, எட்டையாபுரம் ரோடு ஜான்ஜீகன் முதியோர் இல்லம், பிரையண்ட்நகர் செவிதிறன் மாற்றுத்திறனாளி பள்ளி பிரையண்ட் நகர் நேசக்கரங்கள் சிறுவர் சிறுமியர் ஆதரவற்றோர் இல்லம், சிதம்பரநகர் பாசக்கரங்கள் முதியோர் இல்லம், பி அண்டி காலணி பிளஸ்சிங் முதியோர் இல்லம், ஆகிய இடங்களில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மதிய உணவுகளை வழங்கினார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments