Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசர் கோட்டையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையிலிருந்து கல் சிறு நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் ராஜ்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரஹீம் தக்காவிலிருந்து வெங்கடேசன் மற்றும் கங்காதரன் இருவரும் எலவனாசூர் கோட்டை நோக்கி அதிவேகமாக ராங் ரூட்டில் வந்து கல் சிறிதாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் ராஜ்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்  கல்சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, ராஜ்குமார் மற்றும் ரஹீம் தக்காவை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கங்காதரன் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதில் ஏழுமலை மற்றும் ராஜ்குமார் இருவரும். சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த பரிதாபமாக உயிரிழந்த நிலையில் வெங்கடேசன் என்பவர் உயிருக்கு ஆபத்தான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் ராங்ரூட்டில் வந்து மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Copying is disabled on this page!