Breaking News

தனித்தனி ரயில் விபத்துகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்க முதியவர் ஒருவர் ரயிலின் அடிபட்டு இறந்து இருப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இறந்து கிடந்தவரின் சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்த பொழுது அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது னசிராஜ் வயது 50 என்பது தெரியவந்தது இதையடுத்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் இது பற்றி தகவல் அளித்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இறந்து போனவரின் உடலில் காயம் ஏதும் இல்லாத நிலையில் அவர் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் கிடந்தவரின் உடல் அருகே கிடந்த இரண்டு பைகளில் கைலி, சட்டை, பனியன் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவ சீட்டு ஒன்றும் இருந்தது அதில் செல்வம் வயது 60 என்று குறிப்பிட்டிருந்தது ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடவில்லை இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரு வேறு ரயில் விபத்து குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!