மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி: தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் தூத்துக்குடி மரியன்னை கல்லூரி அணி வெற்றி பெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்து போட்டி கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரியில் நடந்தது. இதில், பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடியது. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி அணியும், தூத்தூர் புனித யூதா கல்லூரி அணியும் மோதியது.
இதில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் தர்மர் ஆகியோரை தூத்துக்குடி மரியன்னை கல்லூரி தாளாளர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
No comments