Breaking News

காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர், தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகள் பங்கேற்பு:-

 


மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயம் ஐயாரப்பர் ஆலயம் புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம் படித்துறை விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. ஆற்றின் உள்ளே 16 தீர்க்க கிணறுகள் அமைந்துள்ளன. புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படும் புனித தீர்த்தமான மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இன்று தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர். அனைத்து ஆலயங்களின் அஸ்திர தேவருக்கும் காவிரி கரையில் பால் பன்னீர் இளநீர் சந்தனம் தயிர் தேன் நெய் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. தர்மபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதின குரு மகா சனிமாதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!