Breaking News

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி.


உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியர் அரங்கில் இருந்து பேரிடர் பாதுகாப்பு துறையினர் சுனாமி குறித்த அறிவிப்பினை வழங்கிய பின்னர் வாணகிரி கிராமத்தில் வருவாய் துறையினர் மீனவர்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கின்றனர். தொடர்ந்து கடற்கரை பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வாகனங்களில் வெளியேற்றும் நிலையில் சுனாமி அலை ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

பின்னர் சுனாமி அலையில் சிக்கி பாதிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு 108 வாகனத்தின் மூலம் பேரிடர் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர முதல் உதவி சிகிச்சை அளிக்கின்றனர். இந்த காட்சிகள் ஒவ்வொன்றாக தத்ரூபமாக குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்றது. அதேபோல் சுனாமி அலையில் சிக்கி பாதிக்கப்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது அதன் பிறகு சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்ட அறிவிப்பும் இறுதியாக வழங்கப்பட்டு சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு முடிவடைந்தது.தொடர்ந்து போரிடர் பாதுகாப்பு துறையில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு திரும்பப்பெறும் வரை பொதுமக்கள் அனைவரும் பேரிடர் மையங்களில் காத்திருக்கவும் அதன் பின்னர் வீடுகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், மருத்துவக் குழுவினர், கால்நடை பராமரிப்பு துறையினர்,வனத்துறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் வாணகிரி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!