உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை நோக்கி படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் தீபாவளி பண்டிகைக்காக ஞாயிற்றுக்கிழமை இன்றும் சேர்த்து அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றுடன் விடுமுறை முடிந்து நிலையில் நாளை அனைத்து அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட உள்ளதாலும் பள்ளிகள் திறக்க உள்ளதாலும் சென்னையில் வசித்து வந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மேற்கத்திய கொங்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டு தொடர் விடுமுறையை கழித்துவிட்டு இன்று மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.
பேருந்து கார் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு அனிவகுத்து செல்வதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் திருச்சி மதுரை சேலம் ஈரோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்க வழித்தடங்களிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
மேலும் சுங்கசாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிர்வரும் வழித்தடத்தில் வழியாகவும் வாகனம் செல்வதற்கு தயார் நிலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விபத்து ஏற்படாமல் இருக்கவும் அசம்பாவித சம்பவங்கள் நிகழவாமல் இருக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments