தேனியில் போக்குவரத்து மாற்றம்.
தேனியில் தேசியநெடுஞ்சாலைத்துறை மூலம் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நடுநிலைப்பள்ளியின் அருகில் இரும்பிலான நடைமேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணியில் 100 அடி அகலம் கொண்ட முன்வார்க்கப்பட்ட நடைமேம்பாலம் தூண்களுடன் பொருத்தும் பணிகள் 09.11.2024 இரவு 11.00 மணி முதல் 10.11.20214 பகல் 12.00 மணி வரை நடைபெற உள்ளதால் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படுகிறது.
எனவே 09.11.2024 (சனிக்கிழமை) இரவு முதல் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.00 மணி வரை தேனியிலிருந்து கம்பம் மற்றும் போடி செல்லும் வாகனங்கள் நேருசிலையிலிருந்து பெரியகுளம் சாலை வழியாக திண்டுக்கல் - குமுளி சாலை வழி செல்ல வேண்டும். கம்பம் மற்றும் போடியிலிருந்து தேனி வரும் வாகனங்கள் போடிவிலக்கிலிருந்து திண்டுக்கல் - குமுளி சாலை வழியில் அன்னஞ்சி விலக்கு சென்று தேனிக்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
No comments