Breaking News

புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தரங்கம்பாடி கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..

 


புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வந்த நிலையில் பொறையார் காவல் நிலைய போலீசார் தரங்கம்பாடி முகப்பு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதித்து பேரிகார்டு வைத்து பொதுமக்களை கடற்கரைக்கு செல்லாதவாறு தடுத்து வருகின்றனர்:-

வங்கக் கடலில் நேற்று பெஞ்சல் புயல் சின்னம் உருவாகி இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். இச்சம்பம் அறிந்த பொறையார் காவல் நிலைய போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது கோட்டைக்கு செல்லும் பிரதான முகப்பு வாயில் முன்பு பேரி கார்டுகளை வைத்து பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!