காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவத்தின் நலுங்கு உற்சவம்.
மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான பிரசித்தி பெற்ற ஶ்ரீ மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் திருநாளான ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நலுங்கு உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் ஶ்ரீஅபயாம்பிகை சமேத ஶ்ரீ மாயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலாவாக காவிரி துலாக்கட்ட மண்டபத்தில் எழுந்தருளினர். பெண்கள் காசிவிஸ்வநாதர் ஆலய வாசலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடைபெற்ற நலுங்கு உற்சவத்தில் தேங்காய் உருட்டுதல், கண்ணாடியில் முகம் பார்த்தல், தலை சீவுதல், அப்பளம் உடைத்தல், அரிசி பருப்பு வாங்குதல், பூப்பந்து எரிந்து விளையாடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றது. நிறைவாக சீர்வரிசை சமர்ப்பிக்கப்பட்டு 16 வகையான சோடச உபச்சார தீபாரதனை, மகாதீபாரதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நலுங்கு உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
No comments