தூத்துக்குடி: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை!
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை இந்திராநகர், முத்தம்மாள் காலணி, ஹவுசிங் போர்டு மற்றும் எஸ்எம்டி ஹவுசிங் போர்டு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனையடுத்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அதேபோல் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஸ்பிக்நகர், பாரதி நகர், குமாரசாமிநகர், முள்ளக்காடு, நேசமணிநகர், காந்திநகர், சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளையும் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளர் ராஜபாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உமையருபாகம், உதவி பொறியாளர் பகவதி, பாலமுருகன், பகுதி செயலாளர் ஆஸ்கர், வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஸ்நாதன், மகளிரணி கல்பனா, பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ், வட்ட செயலாளர் தெய்வேந்திரன், பகுதி பொருளாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments