தூத்துக்குடி: மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!
தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் வேளையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தபால் தந்தி காலனி, கதிர்வேல்நகர், பிஎம்சி பள்ளி அருகே உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தனார். பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி வடகிழக்கு பருவமழையையொட்டி தூத்துக்குடியில் பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடிப்படை பணிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படும். சில பகுதியில் தேங்கும் மழைநீரை முழுமையாக அப்புறப்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளேன். மழைகாலங்களில் மரம், மின்கம்பம், பழைய கட்டிடங்கள் பகுதியில் ஓதுங்க வேண்டாம். அனைவரும் பாதுகாப்புடன், நலமுடன் இருப்பது முக்கியம் என்றார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் பாலமுருகன், இளநிலைபொறியாளர் சேகர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ராமர், ஜான், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர் மந்திரகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments