Breaking News

காட்டேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள 33 அடி உயர அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை அஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணம்..

 



புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன், காட்டேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள 33 அடி உயர அருள்மிகு சுந்தர நாயகி உடனுறை அஷ்ட லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

 இதில் அஷ்ட லிங்கேஸ்வரர் மற்றும் சுந்தர நாயகிக்கும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் தும்பூர் சிவன் அடியார்கள் சிவ. வை. விஸ்வகேது சுவாமி திருக்கல்யாணத்திணை செய்து வைத்தார். இதில் அடியார்கள், விழா குழுவினர், பொதுமக்கள் காட்டேரிக்குப்பம் கிராமவாசிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் கலச அலங்காரங்கள் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுந்தர நாயகி, அஷ்ட பைரவர், நவகிரக விநாயகர், ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரங்கள் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பல்வேறு சுவாமி அலங்காரங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு இரவு ஆடல் பாடலுடன் நடனம் ஆடி அசத்தினர்.

No comments

Copying is disabled on this page!