திலாசுப்பேட்டை, வீம கவுண்டன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி முத்து விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்..
புதுச்சேரி மாநிலம், திலாசுப்பேட்டை, வீம கவுண்டன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி முத்து விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை தினம் தோறும் கந்தசஷ்டி பூஜை நடைபெற்றது. மேலும் தினசரி மாலை 6 மணிக்கு அபிஷேகமும் இரவு 7:30 மணியளவில் மூலவர் உற்சவர் தீப ஆராதனையும் நடைபெற்று வந்தது. இதில் கடந்த இரண்டாம் தேதி முதல் ஒவ்வொரு நாளாக சுவாமிக்கு சிவப்பு சாற்றுதல், வெள்ளை சாற்றுதல், பச்சை சாற்றுதல், மஞ்சள் சாற்றுதல், வேல் வாங்குதல், சூரசம்கஹாரம், சஷ்டி லட்ச்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments