Breaking News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

 


வன்னியர் சங்க தலைவர் அருள் மொழியை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சுதேசி மில் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டு, சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது திடீரென்று அவ்வழியாக வந்த தமிழக பேருந்து முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர், தமிழக பேருந்துகளை இயக்க விடமாட்டோம் என கூறி சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீசார் அகற்ற முற்பட்டபோது பலர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!