புதுச்சேரி மடுகரை சாராயக்கடையில் இரு மாநில போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் - மடுகரை சாலையில் தென் பெண்ணையாறு சோதனைச் சாவடியில் இருந்த தமிழக போலீசார், அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.அவரிடம் இருந்து 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து வாங்கி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், மடுகரை சாராயக்கடைக்கு சென்று, அங்கிருந்த 40 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாராயக் கடையில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என, தமிழக போலீசார் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு டி.எஸ்.பி., ரூபன்குமார், தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் பிடிப்பட்டால் அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றார். பின்னர், பறிமுதல் செய்த சாராய பாக்கெட்டுகளுடன், தமிழக போலீசார் கிளம்பி சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments