தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மட்டும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய கும்பல்!.
நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சின்னத்துரை மற்றும் சுகந்தி தம்பதியினர். இவர்களுக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மகனும், பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனும் என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை சின்னத்துரை மற்றும் தாய் சுகந்தி இருவரும் காலையிலேயே வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவது வழக்கம். மூத்த மகன் இன்று கல்லூரிக்கு சென்று விட இரண்டாவது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மதிய வேளையில் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சிறுவன் சாலையில் நடந்து வரும்போது திருமலை கொழுந்து புரம் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று சிறுவன் மீது மோதும்படி சென்றுள்ளது.
இதனால் வேகமாக சென்ற காரை நோக்கி "ஏன் வேகமாக இப்படி மோதும்படி செல்கிறீர்கள்" என சிறுவன் காரில் சென்றவர்களை நோக்கி கேட்டுள்ளான். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு சிறுவனை நோக்கி வந்த காரில் இருந்தவர்கள் தகராறு செய்துள்ளனர். உடனிருந்த மற்றொரு நபர் இருவரையும் விலக்கி வைத்து வீட்டிற்கு செல்ல கூறி அனுப்பி வைத்துள்ளார். மதிய வேளையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து மாலையில் மீண்டும் திருமலை கொழுந்து புரத்திலிருந்து காரில் வந்து சண்டையிட்ட கும்பல் மீண்டும் ஒரு குழுவோடு வந்துள்ளனர்.
தாய் தந்தை வேலைக்கு சென்று விட பாலிடெக்னிக் படிக்கும் இரண்டாவது மகனான மாணவன் மற்றும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த அந்த கும்பல் வீடு புகுந்து மாணவன் தலையில் பீர் பாட்டிலை உடைத்து, அரிவாளை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவனை தாக்கி அதே வேகத்தில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். உடனடியாக அருகில் வசிக்கும் நபர்கள் மாணவனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனை வந்துள்ளனர். மதியம் நடந்த வாய் தகரா இருக்கு மாலையில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் மீண்டும் நாங்குநேரியில் ஜாதி ரீதியான பாகுபாட்டில் மாணவன் மீது வீடு புகுந்து நடந்த கொடூரமான அரிவாள் வெட்டு சம்பவத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் மாணவன் அளித்த பேட்டி மற்றும் அவனது தாயார் சுகந்தி அளித்த பேட்டியும் உள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
No comments