மாணிக்க பங்கு ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணி ஜெசிபி இயந்திரம் மூலம் நடைபெற்றது..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மாணிக்க பங்கு ஊராட்சியில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக கன மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மேலும் மழைநீர் முகத்துவாரம் வழியாக வடியாமல் நின்றதால் சிரமம் ஏற்பட்டது இந்நிலையில் மாணிக்க பங்கு ஊராட்சி சார்பில் புதுப்பேட்டை முகத்துவாரம், பெருமாள் பேட்டை முகத்துவாரம், வெள்ளகோவில் முகத்துவாரம், மற்றும் பெருமாள் பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
ஜேசிபி இயந்திரம் மூலம் முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது மாணிக்க பங்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஊராட்சி செயலர் மணிகண்டன், மற்றும் ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மழை நீர் வடிவமைத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அதேபோன்று புதுப்பேட்டை பகுதியில் பயனற்று பழுதடைந்து இருந்த பேருந்து நிலையத்தை கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கருதி ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
No comments