Breaking News

சிமெண்ட் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைத்து தர கோரி பெண்கள் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்:-

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி காலனி தெருவில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை மிகவும் பழுதடைந்து கப்பி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகிவிடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். முதியோர்கள் குழந்தைகளுக்கு இதனால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, சாலையை சீரமைத்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்

கிளை செயலாளர் அம்புரோஸ் தலைமையில் குளம் போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் "நாற்று நட்டு" நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையை சீரமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!