மாணவர்களுக்கு ஜான் குமார் எம்எல்ஏ முன்னிலையில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது,
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மற்றும் நெல்லி தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், அங்காளன் மற்றும் திரளான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
No comments