நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் வெரும் கைகளால் குப்பைகளும் அல்லும் சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில் தற்பொழுது உளுந்தூர்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பேருந்து நிலையம் விருதாச்சலம் சாலை சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையிலும் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை எவ்வித பாதுகாப்பு உபரணங்கள் இல்லாமல் வெறும் கைகளால் குப்பைகளை அள்ளிக்கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்மழையால் கொட்டி கிடக்கும் குப்பைகள் அதிக துர்நாற்றம் வீசுவதோடு அதனை வெறும் கையால் அள்ளுவதால் அவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தூய்மை பணியில் ஈடுபடுத்தும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments