பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்து வரும் மக்கள் மழை நேரத்தில் கடும் அவதி..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் தெற்கு மாரியம்மன் கோவில் அமிர்தா நகரில் பல குடியிருப்புகள் உள்ளன தனியார் பள்ளியும் உள்ளது மேலும் தற்பொழுது மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது இந்நிலையில் அமிர்தா நகரில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் குடியிருப்பு வாசிகள் அவதியுற்று வருகின்றனர் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்குவதோடு சாலை வசதி இல்லாததால் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர் வரப்பு போன்ற சாலை இல்லாத நிலையில் மழைக்காலத்தில் விஷ ஜந்துக்களும் செல்வதால் அச்சத்துடன் நடந்து செல்வதாகவும் கூறுகின்றனர்.
தற்பொழுது மழை பெய்து வருவதால் சாலையில்லாமல் சேறும் சகதியுமாக உள்ளதாலும் கடும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் பல ஆண்டு கோரிக்கையாக சாலை வசதி கேட்டு வரும் தங்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கையாக சாலை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று தில்லையாடி ஊராட்சி காந்தி நகரிலும் சாலை வசதி இல்லாமல் சிரமம் உள்ளதாகவும் அந்தப் பகுதியிலும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments