Breaking News

சுனாமி குடியிருப்பு பகுதியில் கடந்த 2 மாதமாக வரும் குடிநீரில் புழு இருப்பதாக அப்பகுதி மக்கள் நியாயம் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல்..

 


புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 1400 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்களுக்கு குடிநீர் தேவைக்காக உழவர்கரை நகராட்சி சார்பில் இரண்டு நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


இவ்வாறு வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கடந்த சில மாதங்களாக துர்நாற்றத்துடன் வெள்ளை நிற, செந்நிற ,புழுக்கள் அதிக அளவில் வருகிறது இந்த குடிநீரை பெரும்பாலான குடும்பங்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


தற்போது குடியிருப்பு பகுதியில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு சளி போன்ற உபாதைகள் ஏற்படுவதாக பெரிய காலாப்பட்டு பகுதியில் வசிக்கும் அனைவரது வீட்டு குடிநீரிலும் புழுக்களுடன் குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.


மேலும் இது குறித்து நகராட்சி மற்றும் ஊர் கிராம பஞ்சாயத்துக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த குடிநீர் குடித்துவிட்டு தங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா அல்லது சாக வேண்டுமா என்று பொதுமக்கள் நியாயம் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments

Copying is disabled on this page!