Breaking News

புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், ஓரிரு வாரங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

 


புதுச்சேரி பேருந்து நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 29 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து, ஜூலை 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு புது பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அனைத்து பேருந்துகளும் ஏ.எப்.டி., திடலில் இருந்து இயங்கப்பட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் மாதமே புது பேருந்து நிலைய பணிகளை முடித்து திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், புது பேருந்து நிலைய டெர்மினல், பார்க்கிங் என 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. பஸ்கள் வந்து செல்வதற்கான வசதிகளும் 95 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் தரை தளமும், ஆர்ச் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது.பேருந்து நிலைய தரை தளத்தை பொருத்தவரை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தளத்தை போட முடியவில்லை. எப்படியும் 10 நாட்களுக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிந்து, அதன் பிறகு திறப்பு விழாவிற்கு அரசால் தேதி குறிக்கப்பட்டு விடும்' என்றனர்.

No comments

Copying is disabled on this page!