அண்ணா திடலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அண்ணா திடல் தற்போது ஸ்மார்ட் சிட்டி நிதி உதவியுடன் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் அண்ணாதிடலை
சுற்றியுள்ள அண்ணாசாலை, லப்போர்த் விதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதிகளில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு அந்தக் கடைகளை கடந்த காலங்களில் கடை நடத்தியவர்கள் மற்றும் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமம் வைத்திருப்பவர்களுக்கு ஒப்படைப்பதற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து கடைகளை உடனடியாக ஒப்படைக்குமாறு வலியுறுத்தினார்.
கடைகளை ஒதுக்குவதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு தற்போது உள்ளாட்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருப்பதாகவும்,மேலும் சில தினங்களில் முதல்வர் மூலம் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது நகராட்சி அதிகாரிகள், கடை வியாபாரிகள் உடனிருந்தனர்.
No comments