புதுச்சேரியில் இளம் பெண்களின் மானத்தை காப்பாற்ற ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு.
புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், சிபிஐ (எம்.எல்) சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, புதுச்சேரியில் சிறுமிகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமி புதுவையிலிருந்து கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது புதுச்சேரிக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கிறோம். இதை வன்மையாக கண்டிப்பதாகவும், குற்றாவளி்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது புதுச்சேரி அரசின் தவறான கொள்கை, காவல்துறையின் மெத்தனம், அரசு அதிகாரிகள் அலட்சியம் போன்ற காரணங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற காரணம் என்றார்.
மேலும் பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், புதுச்சேரியில் கஞ்சா தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலா கொள்கை என்ற பெயரில் ரெஸ்டோ பார் திறக்கப்படுகிறது. சித்தர்கள் வாழும் பூமியை சிதைப்பது தான் இந்த ஆட்சியின் கொள்கை. புதுச்சேரி முழுவதும் விபச்சாரம் தங்கு தடையின்றி நடக்கிறது என்றனர்.
No comments