வனத்துறை அருகே உள்ள வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்..
புதுச்சேரி- கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே பெரியார் நகருக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது.
இதனிடையே இன்று காலை அந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் யார் என்றும், மது போதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments