மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபாக் கூட்டம் 23.11.2024 அன்று 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.
இக்கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்தல் தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து எடுத்தரைத்தல் ஜல் ஜீவன் இயக்கம் தீன்தயாள் உபாத்யாய கிராமப்பபுற திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து தெரிவித்தல் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் கிராம செழுமை மீட்சித் திட்டம் அறிக்கை தயாரிப்பு குறித்து கலந்துரையாடுதல் கூட்டாண்மை வாழ்வாதாரம் தொடர்பான விபரங்களை கூட்டத்தில் விவாதித்தல் அயலக தமிழர் நலன் குறித்து குறும்படங்கள் மற்றும் காணொலி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.எனவே, இக்கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபை கூட்டத்தில் விவாதித்திட வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
No comments