நியமன எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை வாயிலாக அதிகாரிகளை எச்சரித்துள்ளது.
நியமன எம்.எல்.ஏ.,க்களை அதிகாரிகள் சரி சமமாக நடத்துவதில்லை. பொது விழாக்களுக்கு அவர்களை கூப்பிடுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் முதலியார்பேட்டை தொகுதியில் நடக்கும் விழாக்களில் தன்னை கூப்பிடுவதில்லை என அசோக்பாபு எம்.எல்.ஏ., சபாநாயகர் செல்வத்திடம் உரிமை மீறல் பிரச்னையை எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறை செயலர் கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில்,ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கும் சட்டசபையால் பரிந்துரைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.,க்கள், தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், அத்தகைய தொகுதி தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் ஏற்பாடு செய்துள்ள அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
விழா தொடர்பாக சம்பந்தப்பட்ட நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்தவொரு விதி மீறலும் தீவிரமாக பார்க்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments