Breaking News

மத்திய அரசின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவாக உள்ளது என புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.. கா

 


உத்தரகண்ட் மாநிலத்தின் உதய நாள் கொண்டாட்டம் புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.விழாவில் உத்தரகண்ட் மாநிலத்தின் பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றை விளக்கும் விதமாக பிரமுகா்கள் பேசினா். அதனை தொடர்ந்து அந்த மாநிலக் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

இதில் பேசிய துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்,

மத்திய அரசின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ் உத்தரகாண்ட் மாநில உதய நாள் விழா நடைபெறுகிறது. பல்வேறு மாநில மக்களிடையே ஒற்றுமை உணா்வை, ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாடு, கலை, விளையாட்டு, உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளவும், பகிா்ந்து கொள்ளவும் இதுபோன்ற உதய நாள் விழாக்கள் உதவுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையே சகோதரத்துவ உணா்வை பலப்படுத்துவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படையின் புதுச்சேரி பிரிவு தலைமை இயக்குநா் தசிலா, காரைக்கால் கமாண்டா் சௌமே சந்தோலா, புதுவை பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள், புதுச்சேரியில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்

No comments

Copying is disabled on this page!